Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வர்த்தகம், முதலீட்டை ஊக்குவிக்க ஐக்கிய அமெரிக்காவின் டெக்ஸாஸின் ஹூஸ்டனில் இடம்பெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார்.
அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்தின்போது இந்தியா, ஐக்கிய அமெரிக்கா இடையேயான சக்தி மற்றும் வர்த்தக உறவை ஆழமாக்குவதற்கான வழிவகைகள் குறித்து ஜனாதிபதி டொனாட் ட்ரம்ப் கலந்துரையாடுவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஆண்டுதோறுமான ஏற்றுமதிகளில் 5.6 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரைக்கும் தீர்வைகளற்றவாறு அனுமதிக்கும் முன்னுரிமைத் திட்ட பொதுமைப்படுத்தப்பட்ட அமைப்பிலிருந்து இந்தியாவை இவ்வாண்டு ஜூன் மாதத்தில் நீக்கியிருந்தது.
இந்நிலையில், வரிகள் மற்றும் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவால் விதிக்கப்படும் ஏனைய விடயங்களால் இரு தரப்பு உறவை மோசமாக்கும் விடயங்கள் தொடர்பில் பிரதான முன்னேற்றமெதுவையும் காணாது ஐக்கிய அமெரிக்க, இந்திய வர்த்தக பேரம்பேசுநர்கள் பேச்சுவார்த்தைகளை இவ்வாண்டு ஜூலையில் முடித்துக் கொண்டதாக அதிகாரிகள் கடந்த மாதம் தெரிவித்திருந்தனர்.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025