Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் குறைந்தது இரண்டு யூத எதிர்ப்புத் தாக்குதல்களை ஈரான் இயக்கியதாகக் குற்றஞ்சாட்டிய அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தனி அல்பானிஸ், அவுஸ்திரேலியாவுக்கான ஈரான் தூதுவரை வெளியேற்றும் திட்டங்களையும் அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியத் தலைநகர் கன்பெராவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், சிட்னி மற்றும் மெல்பேணில் கடந்தாண்டு நடந்த தாக்குதல்களை பாரதூரமானது மற்றும் வெளிநாட்டுத் தேசமொன்றால் நடாத்தப்பட்ட ஆபத்தான ஆக்ரோஷ நடவடிக்கைகள் என வர்ணித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கான ஈரான் தூதுவர் வெளியேற்றப்படுவாரென அவருக்குத் தாங்கள் கூறியதாகத் தெரிவித்த பிரதமர் அல்பானிஸ், ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள தமது தூதரகத்தின் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாகவும் மூன்றாவது நாடொன்றுக்கு தமது அனைத்து இராஜதந்திரிகளை நகர்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர ஈரானின் புரட்சிகர காவலர் படைகளை பயங்கரவாத அமைப்பொன்றாக அவுஸ்திரேலிய அரசாங்கம் சட்டம் மூலம் வகைப்படுத்துமென பிரதமர் அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.
சிட்னியின் லூயிஸ் கொன்டினென்டில் கிச்சனில் ஒக்டோபர் 10, மெல்பேணில் அடாஸ் இஸ்ரேல் வழிபாட்டிடம் மீது டிசெம்பர் 6 தாக்குதல்கள் இடம்பெற்றதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாதபோதும் இரண்டு சம்பவங்களிலும் தாக்குதலாளிகள் சொத்துக்களை தீ வைத்து குறிப்பிடத்தக்களவு சேதமேற்பட்டிருந்தது.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025