2025 மே 15, வியாழக்கிழமை

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் வடகொரியாவுக்கு திடீர் பயணம்

Freelancer   / 2023 ஜூலை 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாஸ்கோ, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே சொய்கு மற்றும் அந்நாட்டு இராணுவ குழுவினர், வடகொரியா நாட்டுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். இதன்படி, சுனான் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்த அவரை வடகொரிய பாதுகாப்பு அமைச்சர் காங் சுன்-னாம் வரவேற்றார்.

கொரிய போர் நிறைவடைந்த 70-வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ரஷ்ய குழு பங்கேற்க உள்ளது. இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த உதவும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய தலைவரான லி ஹாங்ஜாங், இந்த வாரம் தனது குழுவினருடன் வடகொரியாவுக்கு செல்ல இருக்கிறார். இந்த நிலையில், ரஷ்ய அமைச்சரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .