2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

ரஷ்ய போர்க்கப்பலை அழித்த உக்ரேன்

Mithuna   / 2023 டிசெம்பர் 27 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது இராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்தப் போரில் உக்ரேன் இராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.

மேலும் ரஷ்யாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரேன் இராணுவம் மீட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரேன் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, உக்ரேனின் விமானப்படைத் தளபதி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “டிசெம்பர் 26 அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 03.47 மணிக்கு உக்ரேனிய விமானிகள் ரஷ்ய கடற்படையின் நோவோசெர்காஸ்க் என்ற பெரிய போர்க் கப்பலை அழித்தனர். ரஷ்யாவின் கடற்படை சிறியதாகி வருகிறது. விமானப்படை விமானிகளுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X