Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 பெப்ரவரி 01 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவும், உக்ரேனும் தங்களிடையே நூற்றுக்கணக்கான போர்க்கைதிகளை புதன்கிழமை (31) பரிமாறிக் கொண்டன.
சுமார் 65 உக்ரேன் போர்க்கைதிகளுடன் பறந்துகொண்டிருந்த தங்களது ரஷ்ய இராணுவ விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதால் ஒரு வார தாமதத்துக்குப் பிறகு இந்த நல்லெண்ண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“ரஷ்யாவிடம் இருந்த 195 உக்ரேன் போர்க்கைதிகள் அவர்களது தாய் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான ரஷ்ய போர்க்கைதிகள் எங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனர்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரேன் ஜனாதிபதி வோலோதிமீர் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “207 உக்ரேன் இராணுவ வீரர்கள் திரும்ப வருகின்றனர். ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்ட ஒவ்வொரு வீரரையும் நினைவில் கொள்வோம். அவர்கள் அனைவரும் மீட்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ரஷ்யாவுக்கும், உக்ரேனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை நிறைவேற்றுவற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் தொடங்கப்பட்டது.
அப்போது 65 உக்ரேன் போர்க் கைதிகளை ஏற்றிக் கொண்டு ரஷ்ய இராணுவத்துக்குச் சொந்தமான இல்யுஷின் இல்-76 ரகத்தைச் சேர்ந்த விமானம் எல்லை நகரான பெல்கராடை நோக்கி வந்துகொண்டிருந்தபோது அதனை உக்ரேன் சுட்டுவீழ்த்தியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியது.
இதில், போர்க்கைதிகளும், விமானிகள் உள்பட 9 ரஷ்யர்களும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. எனினும், இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று உக்ரேன் கூறியது.
இந்த விவகாரத்தில் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என்று அஞ்சப்பட்டது. எனினும், ஒரே வாரத்தில் இந்த விவகாரம் முடிவுக்கு வந்து கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உக்ரேன் போர் தொடங்கியதற்குப் பிறகு ஒரே நாளில் அதிக கைதிகள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
7 hours ago
8 hours ago