2024 மே 15, புதன்கிழமை

ரஷ்யா மீது ஏவுகணை தாக்குதல் ; 21 பேர் பலி

Mithuna   / 2023 டிசெம்பர் 31 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் - ரஷ்யா இடையேயான போர் 676 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரேனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனிடையே, உக்ரேனின் கீவ், டின்புரொ, கார்கிவ், லிவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை (29) ரஷ்யா தாக்குதல் நடத்தியது. போர் விமானங்கள், ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரேனில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 160 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா மீது உக்ரேன் சனிக்கிழமை (30)  வான்வழி தாக்குதல் நடத்தியது. டிரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலம் ரஷியாவின் பெல்ஹொரட் நகர் மீது உக்ரைன் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 110 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .