2025 நவம்பர் 12, புதன்கிழமை

ரஷ்யாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்

R.Tharaniya   / 2025 நவம்பர் 04 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் உள்ள கம்சாட்காவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கம்சாட்காவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 6.3,6.1 ஆக பதிவாகி உள்ளது.

கம்சாட்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X