Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரான ப. சிதம்பரத்தை தொடர்ந்து, இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சிறை செல்வார்கள் என இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “திஹார் சிறைசாலைக்குச் செல்ல ப. சிதம்பரம் பயப்படுகிறார். வீட்டுக்காவலில் வைக்க கெஞ்சுகிறார். அவர் மீது ஏழு ஊழல் வழக்குகள் உள்ளன. அவரது ஊழல்களுக்கு, 20 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். அவரது மகனும் ஊழலில் ஈடுபட்டுள்ளார். ப. சிதம்பரத்தை தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, சோனியா காந்தி, காங்கிரஸ் ஆட்சியில் மாநிலங்களின் முதலமைச்சர்கள், சிறைச்சாலைக்கு போகும் நிலை ஏற்படும். திஹார் சிறைச்சாலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்தும் நிலை ஏற்படும்.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாக் கட்சியை வளர்க்க வேண்டுமானால், எதிர்வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிட வேண்டும். ஐந்து தொகுதிகளுக்காக மற்ற கட்சிகளிடம் பிச்சை பெறும் நிலையை மாற்ற வேண்டும். அப்போதுதான் கட்சி வளரும்
பொருளாதார மந்த நிலையை மாற்ற, மக்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படவேண்டும். இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எடுத்த தவறான முடிவுகள், தற்போதைய பொருளாதார சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் தெரியாது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கும் பொருளாதாரம் தெரியாது. இவர்களால் சரிந்துள்ள இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த நான்கு, ஐந்து மாதங்களில் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது” என்று கூறினார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago