2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ராணி எலிசபெத்திற்கு பிடித்த உணவு இதுதானா?

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின்  மகாராணி  இரண்டாம் எலிசபெத்  உடல் நலக்  குறைவு காரணமாக கடந்த 8 ஆம் திகதி காலமானார்.

தனது 25 வயதில் ராணியாக பதவியேற்ற எலிசபெத் ராணி சுமார் 70 ஆண்டுகாலம் ராணியாக பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் அவரது உணவுப் பழக்கவழக்கம் குறித்த பல விடயங்களை அரண்மனை ஊழியர்கள் அண்மையில்   பகிரிந்துள்ளனர்.
 
ராணி எலிசபெத், பெரும்பாலும் பாண் மற்றும் ஜாம் உள்ளிட்ட  உணவையே அதிகம் உண்பார் எனவும்,  குறிப்பாக  பாரம்பரிய பிரெஞ்ச் மற்றும் பிரிட்டிஷ் உணவுகளை விரும்பி உண்பார் எனவும்  பெரும்பாலும் அரண்மனையின் தோட்டங்களில் விளைவும் காய்கறிகளையும், அவருக்கென்று தனியாக ஆற்றில் வளர்க்கப்படும் சால்மன் மீன்களையே உண்பார்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, யோகர்ட், செரல் (அ) மல்டிகிரெய்ன் டோஸ்ட், சிறப்பு நாட்களாக இருந்தால் ஸ்கிராம்பல்டு எக் மற்றும் ஸ்மோக்டு சால்மன் மீன் ஆகியவற்றை ராணி உட்கொள்வார் எனவும், எனினும் ஒட்டகம், முயல் உள்ளிட்ட சில இறைச்சி வகைகளை ராணி உண்டதே இல்லை எனவும் ” கூறப்படுகிறது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X