2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ரூ.30 கோடி லாட்டரி: டாட்டா காட்டி பறந்த காதலி

R.Tharaniya   / 2025 ஜூன் 02 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலியாக இருந்தாலும் சரி, காதலனாக இருந்தாலும் சரி, ஒருவரை ஒருவர் நம்புவது சற்று சிரமமாக தான் இருக்கிறது. அந்தளவுக்கு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. 

தனக்கு லாட்டரி சீட்டில் விழுந்த 30 கோடி ரூபாவை, தன்னுடைய காதலியிடம் கொடுத்த நிலையில், அந்த பணத்தை எடுத்துக்கொண்டு அந்த காதலி தன்னுடைய மற்றொரு காதலனுடன் பறந்துவிட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 
 
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 
 
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் (லாரன்ஸ் ) என்பவர் ரூ.30 கோடி லாட்டரி வென்றுள்ளார்.
அந்தத் தொகையைப் பெற்று வருமாறு அவர் தனது காதலியை அனுப்பிய நிலையில், அந்த பணத்தை பெற்று அவர் தனது காதலனுடன் சென்றுவிட்டார்.

இது தெரிந்தது உடைந்து போன கனடா இளைஞர் அந்த பெண்ணுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

கனடாவின் வின்னிபெக் பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல் என்பவர் தனது முன்னாள் காதலிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அதாவது இவர் 5 மில்லியன் கனடா டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 கோடி) லாட்டரியை வென்றுள்ளார்.
இருப்பினும், சில காரணங்களால் அவரால் அந்த பரிசுத் தொகையை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் தனது காதலியை நம்பி லாட்டரியை கொடுத்து, பரிசுத் தொகையை பெற்று வருமாறு கூறியுள்ளார். அந்த பெண் லாட்டரியுடன் சென்று பரிசுத் தொகையை பெற்றுள்ளார். 
ஆனால், அதன் பிறகு லாரன்ஸ் கண்டுகொள்ளாமல் அவர் தனது மற்றைய காதலனுடன் சென்றுவிட்டார். இதை அறிந்த  லாரன்ஸ் இப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X