Editorial / 2025 மே 19 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மே 18 இல் நடைபெற்ற தமிழின அழிப்புக்கு எதிர்ப்பை தெரிவித்து லண்டனில் வாழும் ஈழத் தமி ழர்களும் நினைவு தினத்தை ஆர்ப்பாட்டம் பேரணியில் ஈடுபட்டு ஞாயிற்றுக்கிழமை (18) பிற்பகல் 3 மணியளவில் அனுஷ்டித்தனர்.
21 ஆம் நூற்றாண்டின் அதியுச்ச இன அழிப்பின் 16 வது ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள் என்ற பதாகையை தாங்கிய வண்ணம் ஈழத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஐக்கிய இராச்சியம் தமிழ் இளையோர் அமைப்பு என்பன இணைந்து இதற்கான ஏற்பாட்டை செய்தன.
பெரும் எண்ணிக்கையான ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியின் பின்னர் தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை மீள பெற்றுக்கொள்வதற்கு உதவ வேண்டிய கடப்பாடு பிரிட்டனுக்கு உள்ளதை வலியுறுத்தினர்.
இந்த நிகழ்வில் உலகளாவிய புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்ப டுத்தினர்.
வி.ரி.சகாதேவராஜா




53 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
59 minute ago
1 hours ago