2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

லெபனானில் துப்பாக்கி பிரயோகம்

Freelancer   / 2024 ஜூன் 05 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெபனான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் மீது மூவர் தூதரகத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த சம்பவத்தினை உறுதி செய்துள்ள அமெரிக்க தூதரகம் தூதரக வாசலை இலக்குவைத்து சிறிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதாக கூறியுள்ளது.

அத்துடன் லெபானின் பாதுகாப்பு தரப்பினர் உட்பட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அனைவரும் விரைந்து செயற்பட்டதால் தூதரகமும் எங்கள் குழுவினரும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்துள்ளது.

இதேவேளை சிரியாவை சேர்ந்த ஒருவரே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என லெபனானின் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் உடனடியாக பதில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இதன்போது தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் காயமடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக லெபனானின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X