Freelancer / 2024 நவம்பர் 27 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெபனானுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல், வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு அளித்து வரும் ஈரானும், இஸ்ரேல் மீது கோபம் அடைந்துள்ளது. இதனால், இஸ்ரேல் மீது ரொக்கெட் வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மேற்கு ஆசியாவில் முக்கிய திருப்பமாக லெபனானுடன் போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த ஒப்பந்தம் உடனடியாக அமுலுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், லெபானிடம் இருந்து முறையான அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago