Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

லெபனானின் தற்காலிக பிரதமர் சாட் ஹரிரியை பிரதமராகத் தேர்ந்தெடுக்க தாம் ஆதரவளிக்க மாட்டோம் என பிரதான கிறிஸ்தவக் கட்சிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, லெபனானின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பது பிற்போடப்பட்டுள்ளது.
அந்தவகையில், வாரக் கணக்காக நீடித்த அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து புதிய நெருக்கடியொன்று தற்போது ஏற்பட்டுள்ளது.
லெபனானின் ஆளும் வர்க்கத்துக்கெதிரான பரவலான ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் தனது பிரதமர் பதவியிலிருந்து இவ்வாண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி சாட் ஹரிரி இராஜினாமா செய்தபோதும், ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் லெபனானின் சுன்னி முஸ்லிம்களின் ஆதரவைப் பெறத் தவறிய நிலையில் நேற்று பிரதமர் பதவிக்குத் திரும்பவிருந்தார்.
லெபனான் அரசமைப்பிலுள்ள முக்கிய சரத்தின் நவீனகால அர்தத்தின்படி நாடாளுமன்றத்திலும், அரசாங்கத்திலும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கிடையே சமநிலை காணப்படவேண்டும்.
அந்தவகையிலேயே, லெபனானிய அரசாங்கத்திலுள்ள பிரதான கிறிஸ்தவக் கட்சிகளான சுதந்திர தேசப்பற்று இயக்கம், லெபனானிய படைகளின் ஆதரவில்லாமல் அரசாங்கத்தின் அரசமைப்பு சட்டபூர்வமானதன்மை கேள்விக்குட்படுத்தப்படும் என்ற நிலையிலேயே சாட் ஹரிரி மீண்டும் பிரதமராக வருவதுக்கு தடைக்கல் காணப்படுகின்றது.
லெபனான் எதிர்கொள்கின்ற பாரிய சமூக, பொருளாதார, நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசமைப்பு, தேசிய பிரச்சினைகளை மேலதிகமாக சேர்ப்பதை தடுக்கும் பொருட்டு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நாடாளுமன்ற கலந்துரையாடல்களை பிற்போடுமாறு ஜனாதிபதி மிஷெல் ஆனை பிரதமர் சாட் ஹரிரி நேற்று வினவியதாக அவரது அலுவலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான கலந்துரையாடல்களை நாளை மறுதினம் ஜனாதிபதி மிஷெல் ஆன் நடாத்தவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .