Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

லைபீரிய இஸ்லாமியப் பாடசாலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீயொன்றில் மாணவர்களும், ஆசியர்களும் தூங்கிக் கொண்டிருந்த இடத்தை தீ மூடிக் கொண்ட நிலையில் குறைந்தது 26 மாணவர்களும், இரண்டு ஆசியர்களும் நேற்றுக் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தீ ஆரம்பித்தபோது மாணவர்கள் பாடசாலையில் தூங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் மோஸஸ் கார்ட்டர், மின்சாரக் கோளாறால் தீ ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
லைபீரியத் தலைநகர் மொன்றோவியாவின் புறநகர்களிலுள்ள பேனெஸ்வில்லேயிலுள்ள சம்பவ இடத்துக்கு விஜயம் செய்திருந்த லைபீரிய ஜனாதிபதி ஜோர்ஜ் வெயா, தீயுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
10 தொடக்கம் 20 வயதுகளுடைய 26 மாணவர்களுடன், இரண்டு ஆசிரியர்கள் இறந்ததாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ள நிலையில், 27 மாணவர்கள் இறந்ததாக மோஸஸ் கார்ட்டர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தமது நாட்டின் பிரஜைகள் சிலர் தீயில் இறந்ததாக லைபீரியாவின் அயல் நாடான கினியின் ஜனாதிபதி அல்பா கொன்டே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தீக்கான காரணத்தை தங்களது அணி விசாரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த மோஸஸ் கார்ட்டர், அது மின்சாரமாக இருக்கலாம் எனக் கூறியதுடன், தீயானது குற்றச் சம்பவமொன்றாக இருக்காது என தெரிவிப்பதற்கும் மறுத்துள்ளார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago