2025 நவம்பர் 05, புதன்கிழமை

‘வதந்திகளுக்கு பதில் கூற முடியாது’

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சசிகலாவை சிறையில் இருந்து விடுவிக்க முயற்சி செய்து வருவதாகத் தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அ.ம.மு.க) பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், சசிகலா வந்தவுடன் அனைதிந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (அ.இ.அ.தி.முக) அ.ம.மு.க இணைக்கப்படுமா போன்ற வதந்திகளுக்கு எல்லாம் பதில் கூற முடியாது என்று கூறியுள்ளார்.

தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கும்பகோணம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தமிழ்நாடு சட்டசபை உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து இன்று (17) மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியிலேயே மேற்படி கருத்தை அவர் வெளிப்படுத்தினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “ஹிந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் ஹிந்தித் திணிப்பதை தடுக்க வேண்டும். மத்திய அரசாங்கம் இந்தியை தமிழ்நாட்டில் திணிக்காது என்று நம்பிக்கை உள்ளது.

அ.ம.மு.கவின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது. வருங்காலத்தில் அ.ம.மு.கதான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சக்தியாக, கட்சியாக விளங்கும்.

கர்நாடக மாநிலப் பொறுப்பாளர் புகழேந்தி அ.ம.மு.க கட்சி தனக்குத் தான் சொந்தம் என்று கூறி வருகிறார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை. அதற்கு தேவையும் இல்லை” என்று கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X