2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வரி விவகாரம்: டிரம்ப்பின் திடீர் முடிவு

Freelancer   / 2025 ஏப்ரல் 10 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவை தவிர மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக,  ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே விகிதத்தில் பரஸ்பரமாக வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். 

அதன்படி, கடந்த 2ஆம் திகதி எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை சதவீதம் வரி என்று ட்ரம்ப் அறிவித்தார். இந்த வரிவிதிப்பு 9ஆம் திகதி, அமுலுக்கு வரும் என்று அறிவித்தார்.

 

இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்தார். சீன பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 20 சதவீத வரியுடன் கூடுதலாக 34 சதவீத வரி விதித்தார். அதற்கு சீனா பதிலடியாக, அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத வரி விதித்தது. 

 

அந்த வரியை 8ஆம் திகதிக்குள் இரத்து செய்யாவிட்டால், சீன பொருட்கள் மீது மேலும் 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். ஆனால், சீனா இரத்து செய்யவில்லை. இதனால் சீன பொருட்கள் மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.

அத்துடன், சீன பொருட்கள் மீதான மொத்த வரி 104 சதவீதமாக உயர்ந்தது. அமெரிக்காவுக்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்கள் மீது சீனா மேலும் 50 சதவீத வரி விதித்தது. இதனால், அமெரிக்க பொருட்கள் மீதான சீனாவின் வரிவிதிப்பு 84 சதவீதமாக உயர்ந்தது. இது, வியாழக்கிழமை (10) அமுலுக்கு வந்தது. 

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் என்ற அச்சம் எழுந்த நிலையில், திடீரென வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் சீனாவுக்கு மட்டும் விதி விலக்கு கிடையாது எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .