2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வலுக்கிறது இந்திய - கனடா விரிசல்

Simrith   / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இருந்து 40 கனடா தூதரக அதிகாரிகளை அதிரடியாக இந்தியா வெளியேற்றப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையே மோதல் நிலைகள் தொடர்வதுடன், 41 கனட தூதரக அதிகாரிகளை திரும்ப  அழைக்குமாறு கனடாவிடம் இந்தியா கேட்டு கொண்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதிக்குள் அவர்கள் வெளியேற வேண்டும் எனவும் தவறினால் அவர்களது பொறுப்பை நீக்கிவிடுவோம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

மொத்தம் 62 கனட அதிகாரிகள் இந்தியாவில் உள்ள நிலையில் அவர்களது எண்ணிக்கையை 41ஆக குறைக்க வேண்டும் என்று இந்தியா கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட நிஜ்ஜார், கடந்த(18.06.2023) ஆம் திகதி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரைக் கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக சமீபத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டால், ஏற்கனவே பதட்ட நிலையில் இருந்த இந்திய-கனடா உறவு மேலும் பாதிக்கப்பட்டது.

இருப்பினும் இந்திய அரசு இதுகுறித்து தற்போது வரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X