Editorial / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேறக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்று (25) அறிவிக்கப்பட்டன.
விக்கிரவாண்டி, நான்குனேரி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, விருப்ப மனுக்கள் அளித்தோரிடம் நேர்காணல்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையிலேயே, இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் குறித்த அறிவிப்பு இன்று காலை வெளியிடப்பட்டது.
அந்தவகையில், விக்கிரவாண்டி தொகுதியில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளராக எம்.ஆர். முத்தமிழ்ச்செல்வனும், நான்குனேரியில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளராக ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும் அறிவிக்கப்பட்டனர்.
இத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பானது அடுத்த மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
11 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago