2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விடிய விடிய ’நிர்வாண’ பார்ட்டி

Janu   / 2023 டிசெம்பர் 25 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில்  நடைபெற்ற நள்ளிரவு விருந்துபசாரத்தில் பிரபலங்கள் அனைவரும்  நிர்வாணமாக   கலந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு ரஷ்யத் - மொஸ்கோவில் உள்ள பிரபல இரவு விடுதியான முட்டாபோரில் நடைபெற்றுள்ளது. 

உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவில் ஜனாதிபதியாக இருப்பவர் புட்டின். கடந்த 2000ஆம் ஆண்டு முதலே ரஷ்யாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் புட்டின். அங்கு எதிர்க்கட்சிகளையும் தனக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையும் காலி செய்வதை புட்டின் வாடிக்கையாகவே வைத்துள்ளார்.

இதற்கிடையே அவரது அரசுக்கு எதிராக இப்போது ரஷ்யாவில் குரல்கள் எழுந்துள்ளது. ரஷ்யாவின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் புட்டின் காக்கத் தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ரஷ்ய தலைநகர்  மொஸ்கோவில் நடந்த நள்ளிரவு விருந்துபசாரம் ஒன்றே  இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  விடிய விடிய நடந்த இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே பிரபலங்கள். இரவு முழுக்க விருந்துபசாரம் நடத்துவதால் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். இந்த விருந்துபசாரத்தின் ஆடைதான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  .

ஆடைகள் இல்லாமல் இவர்கள் நடத்திய விருந்துபசாரம் நாட்டின் விழுமியங்களுக்கு எதிராக இருப்பதாகப் பலரும் சாடியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X