2025 நவம்பர் 05, புதன்கிழமை

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் - 2

Editorial   / 2019 ஜூலை 22 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து, “சந்திரயான்-2” விண்கலம் வெற்றிகரமாக தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இன்று (22) பிற்பகல் 2.43 மணியளவிலேயே, சந்திரயான் - 2 ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ, கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை, சந்திரனில் ஆய்வு செய்ய அனுப்பியது. அந்தத் திட்டம் வெற்றிப் பெற்றதையடுத்து, சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள, “சந்திரயான்-2” விண்கலத்தை அனுப்ப, இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது.

இந்த விண்கலம், கடந்த 15ஆம் திகதி ஏவப்படவிந்த நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் ​கோளாறு காரணமாக, இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையிலேயே, குறித்த விண்கலம், நேற்று ஏவப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளின் ஒருகட்டமாக, சந்திரனை ஆய்வு செய்யும் அளப்பரிய பெரும் சாதனையாக, “சந்திரயான்-2” விண்கலம், விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X