2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விந்தணுவை ஊசி மூலம் செலுத்தியதால் தாயான யுவதி

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியாவில் உள்ள மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் `ஷானன் நசரோவிச்`.

 23 வயதான இவர் அண்மையில் தான் கர்ப்பம் அடைந்த விதம் குறித்து வெளியிட்ட வீடியோவானது  மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 குறித்த வீடியோவில் ” நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர். எனக்கு 19 வயதாக இருக்கும் போது விந்தணு நன்கொடையாளர்  ஒருவர் மூலம்  விந்தணுக்களைப் பெற்று அதனை ஊசி மூலம் எனது உடலில் செலுத்தி கர்ப்பம் அடைந்தேன்.

எனக்கு தற்போது ஒரு மகள் உள்ளார். நான் கர்ப்பம் தரித்தவிதம் குறித்து யாரும் நம்புவது கிடையாது. ஆனால் நான் விந்தணுவை ஊசி மூலமாகச் செலுத்தியே குழந்தை பெற்றுக் கொண்டேன் என்பதை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இச்  சம்பவம் மருத்துவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .