2025 மே 14, புதன்கிழமை

விந்து, கருமுட்டை இன்றி மனிதக் கரு

Freelancer   / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கரு வளர்ச்சிக்கு விந்து, கருமுட்டை, கருப்பை என்பன அவசியம் ஆனால் இது எதுவும் இல்லாமல் 14 நாட்களேயான மனித கரு போன்ற 'கரு மாதிரியை' வெய்ஸ்மேன் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள விஞ்ஞானிகள் குழு வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

இது குறித்துக் கூறிய விஞ்ஞானிகள் குழு, ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட ஸ்டெல் செல்கள் மூலம் மனித கருக்களின் மாதிரிகள் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதோடு கர்ப்ப பரிசோதனையை சாதகமாக மாற்றிய ஹார்மோன்கள் குறித்த விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செயற்கை கரு மாதிரிகள், நஞ்சுக்கொடி, மஞ்சள் கரு, கோரியானிக் சாக் மற்றும் பிற வெளிப்புற திசுக்கள் உள்ளிட்ட இந்தக் கட்டத்திற்கான போதுமான வளர்ச்சியை உறுதி செய்யும் அனைத்தையும் கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். "இந்த செயற்கைக் கரு தற்போது முதல் மாதத்தில் உள்ளது" என்று பேராசிரியர் ஜேக்கப் ஹன்னா கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .