2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

விமான விபத்தில் 6 பொலிஸார் பலி

Freelancer   / 2025 ஏப்ரல் 26 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

  தாய்லாந்தில் விமானமொன்று விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துநொருங்கியதில் ஆறு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

ஹ_வா ஹின் மாவட்டத்தில் பரசூட் பயிற்சிக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருந்த விமானமே விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியுள்ளது.

வைக்கிங் டிஎச்சி - 6 டுவின் ஓட்டர் என்ற இந்த விமானம், ஹ_வா ஹின் விமானநிலையத்திற்கு அருகில் விபத்திற்குள்ளாகியுள்ளாகியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலநிலையை அவதானிப்பதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குறித்த விமானம் புறப்பட்டு ஒரு நிமிடத்தின் பி;ன்னர் கட்டுப்பாட்டை இழந்தது கடலில் விழுந்து நொருங்கியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

விமானம் புறப்பட்டு ஒருசில நிமிடங்களில் வெடிப்பு போன்ற சத்தம் அதன் இயந்திரத்திலிருந்து வந்தது விமானி விமானத்தை விமானநிலையத்தில் தரையிறங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரையிலிருந்து 100 மீற்றர் தொலைவில் விமானத்தின் சிதைவுகள் காணப்படுவதுடன், விமானம் இரண்டாக உடைந்துள்ளது.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .