2024 மே 16, வியாழக்கிழமை

விமானத்தில் தீ ; 5 பேர் பலி

Mithuna   / 2024 ஜனவரி 03 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் செவ்வாய்க்கிழமை (02)  திடீரென தீப்பிடித்து எரிந்தது. ரன்வேயில் தரையிறங்கும்போது, கடலோர காவல்படையின் விமானம் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பற்றியபடி விமானம் சிறிது தூரம் ஓடுபாதையில் சென்று, அதன்பின் நின்றுவிட்டது. அதேசமயம் கடலோர காவல் படையின் விமானமும் தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். விமானத்தில் இருந்த 367 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என அனைவரும் மீட்கப்பட்டதாக என்எச்கே தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது.

ஆனால், கடலோர காவல் படை விமானத்தில் இருந்த 6 பேரில் ஒருவர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 5 பேர் என்ன ஆனார்கள்? என்ற தகவல் வெளியாகவில்லை. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த 5 பேர் உயிரிழந்தனர். மத்திய ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகளுக்காக கடலோர காவல்படை வீரர்கள் விமானத்தில் புறப்பட தயாராக இருந்தபோது, விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .