2025 மே 15, வியாழக்கிழமை

விமானத்தில் பறக்காது உலகை சுற்றிய மனிதர்

Freelancer   / 2023 ஜூன் 13 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானம் ஏறாமலேயே உலகின் ஒவ்வொரு நாட்டிலும் கால் பதித்த மனிதர் என்ற பெருமையை டென்மார்க்கை சேர்ந்த ஒருவர் பெற்றுள்ளார்.

டென்மார்க் விஞ்ஞானி பியட் ஹெய்ன் கூறிய 'உலகம் உருண்டையானது என்பதை புரிந்து கொள்ள ஒருவர் உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும்' என்ற விஷயம் தான் தனக்குள் ஆர்வத்தைத் தூண்டியதாக அவர் தெரிவித்துள்ளார்

வீட்டை விட்டு சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிய இவர் தனது உலகப் பயணத்தை முடிக்காமல் வீடு திரும்பக் கூடாது என்ற நோக்கத்துடன் பயணத்தைத் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு நாட்டுக்குச் சென்றாலும் குறைந்தது அந்நாட்டில் 24 மணிநேரம் தங்கவேண்டும் என்றும் எந்த காரணத்தைக் கொண்டும் விமானத்தில் ஏறக்கூடாது என்றும் தரை மற்றும் கடல் வழியாகவே தமது பயணத்தை நிறைவு செய்யவேண்டும் எனவும் அவர் தனக்கான விதிகளை வகுத்துக்கொண்டுள்ளார்.

உலகின் அனைத்து நாடுகளிலும் பயணம் செய்ய அவருக்கு 3 ஆயிரத்து 512 நாட்கள் தேவைப்பட்டன .

ஐக்கிய நாடுகள். அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 193 நாடுகள் மற்றும் அந்த அமைப்பில் சேர முயற்சிகளை மேற்கொண்டுள்ள இரண்டு நாடுகள் உள்பட 203 நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்
.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .