2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

விவசாயிகள், கால்நடை பராமரிப்பாளர்கள் மோதல் : 56 பேர் பலி

Freelancer   / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவின் பினு மாகாணத்தில், விவசாயிகளை குறிவைத்து கால்நடை பராமரிப்பாளர்கள் நடத்திய தாக்குதலில் 56 பேர் உயிரிழந்தனர். 

நைஜீரியாவின் பினு மாகாணத்தில் விவசாயிகளுக்கும், கால்நடை பராமரிப்பாளர்களும் இடையே பல மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 

இது மத ரீதியிலான மோதலாக உருவெடுத்து வருகிறது. 

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் விவசாய பணியிலும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் கால்நடை பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படும் மோதலில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், பினு மகாணம் குவம், லொகோ ஆகிய பகுதிகளில் விவசாயிகளை குறிவைத்து கால்நடை பராமரிப்பாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 56 பேர் உயிரிழந்தனர். 

இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .