2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வெனிஸ் திரைப்பட விழாவில் ஜெலென்ஸ்கி

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 02 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


இத்தாலியில்  79ஆவது ஆண்டு வெனிஸ் திரைப்பட விழா,  கடந்த புதன் கிழமை ஆரம்பமானது.

இவ்விழாவின் தொடக்க நிகழ்வின் போது காணொலி மூலம்  உரையாற்றிய  உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி "உக்ரேனில் நடந்த போரை மறந்துவிடாதீர்கள்.

தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் உக்ரேனில் இறக்கின்றனர். அவர்கள் இனி மேல் எழுந்திருக்கப் போவதில்லை.சினிமா அமைதியாக இருக்குமா, அல்லது அதைப் பற்றிப் பேசுமா? நம் காலத்தில் சினிமா அமைதியாக இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் புதிய சாப்ளின்கள் தேவை" என்றார்.என்றார்.


இந்நிகழ்வின் போது  உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் பெயர்களும்  திரையில் ஒளிபரப்பப்பட்டன.

 முன்னதாக கடந்த மே  மாதம் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிலும்  செலென்ஸ்கி ஒரு எழுச்சி வாய்ந்த உரையை நிகழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X