2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தில் சிக்கிய சிந்து கிராம மக்கள்

Freelancer   / 2022 செப்டெம்பர் 13 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் மிகப்பெரிய ஏரியான மன்சார் ஏரி நிரம்பியதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிந்து கிராம மக்கள் சிக்கியதாக  சிஎன்என் தெரிவித்துள்ளது.

கடுமையான மழை மற்றும் உருகும் பனிப்பாறைகளின் கூட்டு விளைவுகளால் மன்சார் ஏரியானது, நூற்றுக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பெருக்கெடுத்து ஓடியது.

மூன்றாவது முறையாக அதன் அணையை உடைத்து, அருகிலுள்ள பல கிராமங்களை வெள்ளத்தில் தத்தளிக்க வைத்தது.

செயற்கைக்கோள் படங்களில், ஏரியின் நீர்மட்டம், உடைப்புகள் இருந்தபோதிலும்  நீர் மட்டம் அபாயகரமாக உயர்ந்து இருப்பதைக் காட்டுகின்றன

கிட்டத்தட்ட 48 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான சிந்துவில் உள்ள ஏரியின் நீர்மட்டத்தைக் குறைக்க பாகிஸ்தான் அதிகாரிகள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஏரியின் நீரை மக்கள் அடர்த்தி குறைந்த பகுதிகளுக்குத் திருப்பிவிட்டமை சிறிய கிராமங்களில் வெள்ளப்பெருக்துக்கு வழிவகுத்தது என்றும் சுமார் 135,000 மக்களை இது பாதித்துள்ளது என்று சிந்து மாகாணத்தின் நீர்ப்பாசன அமைச்சர் ஜாம் கான் ஷோரோ சிஎன்என்க்கு தெரிவித்துள்ளார்.

சுமார் 1.55 மில்லியன் மக்கள் வசிக்கும் தாது மாவட்டத்தில் பரந்த வெள்ளத்தைத் தவிர்க்க இந்த நடவடிக்கை அவசியம் என்று ஷோரோ குறிப்பிட்டார்.

ஏரி நிரம்பி வழியும் என்று அதிகாரிகள் மக்களை எச்சரிக்க முயற்சித்ததாகவும், அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு மக்களை வற்புறுத்தியதாகவும் ஷோரோ கூறியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

"நாங்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம், ஆனால் பேரழிவின் அளவு மிக அதிகமாக உள்ளது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது," என்றார்.

ஏரி நிரம்பி வழிவதை தான் விரும்பவில்லை எனவும் ஆனால் அதிகாரிகள் தண்ணீரைத் திருப்பிவிடவில்லை என்றால், ஏரியிலிருந்து 100 கிலோமீற்றர் (62 மைல்) வரையிலான நகரங்கள் ஆபத்தில் தள்ளப்பட்டிருக்கும் என்று சிந்து மாகாணத்தின் முதலமைச்சர் முராத் அலி ஷா குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X