2025 மே 15, வியாழக்கிழமை

வேற்றுகிரக பறக்கும் தட்டு

Freelancer   / 2023 ஜூலை 27 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காங்கிரஸின் கமிட்டி கூட்டத்தில் பேசிய அமெரிக்க முன்னாள் உளவுத்துறை அதிகாரி டேவிட் க்ரூஷ், வேற்றுக்கிரக அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் மற்றும் மனித உயிர் அல்லாத வேற்றுக்கிரகத்தை சேர்ந்த உடல்கள் மீட்கப்பட்டு அமெரிக்க அரசு மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தான் இதனை வெளியே சொன்னதற்கு தன் மீது தாக்குதல் நடந்ததாகவும் கூறினார்.

தன்னுடன் அமெரிக்க அரசாங்கத்தில் பணிபுரிந்தவர்களில் சிலர், இந்த வேற்றுகிரக நடவடிக்கைகளால் உடல்ரீதியாக காயமடைந்ததாகவும் மேலும் கூறினார். ஆனால் தான் இதுவரை எந்த ஏலியன்களையும் பார்த்ததில்லை என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அமெரிக்காவின் பென்டகன் நிர்வாகம் இவரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .