Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஏப்ரல் 07 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தின் 2ஆவது மிக பெரிய நகரான பிர்மிங்காமில் குப்பைகளை சேகரிப்போர் ஒரு மாத காலத்திற்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊதிய முரண்பாடு, பதவி உள்ளிட்ட விவகாரங்களை முன்னிட்டு அவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
இதனால், குப்பைகள் வீதிகள் முழுவதும் தேங்கியுள்ளன. அதில் இருந்து கிளம்பும் துர்நாற்றம் காற்றில் பரவி மக்களை துன்பத்திற்கு ஆளாக்கி வருகிறது.
இதனால், மொத்தம் 17 ஆயிரம் தொன் குப்பைகள் சேர்ந்துள்ளன. ஏறக்குறைய 400 பேர் வரை இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அந்நகரில் 11 இலட்சம் பேர் வரை குடியிருப்புவாசிகள் உள்ளனர். அவர்களின் வீடு வழியே குப்பைகளை சேகரிக்கும் ஏதேனும் ஒரு வாகனம் சென்றால் மக்கள் திரளாக ஓடி செல்கின்றனர்.
குவிந்து கிடக்கும் குப்பைகளை கிளறுவதற்காக பூனை அளவுள்ள எலிகளும், நரிகளும் மற்றும் பூனைகளும் சுற்றி திரிகின்றன. குப்பைகளில் புழுக்களும் நெளிந்து செல்கின்றன.
இதுபற்றிய வீடியோவும் வைரலானது. இதேபோன்று குப்பைகளை சேகரிக்க சென்றவர்களை எலிகள் விரட்டி செல்லும் மற்றொரு வீடியோவும் வைரலானது.
இதனால், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் புயலை கிளப்பியுள்ளன. ஸ்டார்மரும் இதனை ஒப்பு கொண்டிருக்கிறார். இது முற்றிலும் ஏற்று கொள்ள முடியாதது என்று அவர் கூறியுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago