2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வைத்தியர் கொடுத்த வயாகராவால் உயிர் பிழைத்த தாதி

Ilango Bharathy   / 2022 ஜனவரி 21 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த செவிலியர் ஒருவரை  வைத்தியர் ஒருவர் ‘வயாகரா‘ கொடுத்து  காப்பாற்றிய விநோத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள லிங்கன்ஷையரைச் சேர்ந்தவர் மோனிகா அல்மெய்டா. 37 வயதான அவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு கடந்த நவம்பர் மாதம் கொரோத் தொற்று ஏற்பட்டுள்ளதோடு அதனால் அவரது உடல்நிலையும்  மிகவும் மோசமடைந்துள்ளது.

இதனால் மருத்துவர்கள் அவரை induced coma நிலைக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து அவருக்கு பல்வேறு முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவரது உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது.

இதனால் மருத்துவர்கள் சோதனை சிகிச்சை முறையில் மோனிகா அல்மெய்டாவுக்கு மிக அதிக டோஸ் கொண்ட வயாகரா மாத்திரையை அளித்துள்ளனர்.

இதனையடுத்து சுமார் 28 நாட்களுக்குப்பின்னர் , அவர் கோமாவில் இருந்து கண் விழித்துள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த மருத்துவர்” வயகரா மாத்திரைகள் இரத்த நாளங்களைத் தளர்வு அடையச் செய்து, அனைத்துப் பகுதிகளுக்கும் அதிக இரத்தம் பாய அனுமதிக்கிறது. இதன் மூலமே அவர் கோமாவில் இருந்து மீண்டதாகத் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .