2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

ஹகிபிஸ் சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஐ அண்மித்தது

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானை கடந்த வாரயிறுதியில் தாக்கி ஏறத்தாழ 70 பேரைக் கொன்ற மற்றும் பரவலான அழிவை ஏற்படுத்திய சக்திவாய்ந்த ஹகிபிஸ் சூறாவளியில் தப்பித்தவர்களை தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் நாள் முழுவதும் இன்று ஈடுபட்டிருந்தனர்.

கடந்த சனிக்கிழமை இரவு ஜப்பானைத் தாக்கிய ஹகிபிஸ் சூறாவளியால் பலத்த காற்று, எதிர்பார்க்கப்படாத மழை ஏற்பட்டிருந்த நிலையில் நிலச்சரிவுகள் ஏற்படிருந்ததோடு, அதனால் டசின் கணக்கான ஆறுகள் அதன் ஆற்றுப்படுக்கைகளை ஊடறுத்துச் சென்றிருந்தன.

இன்று பிற்பகல் வரையிலும் ஏறத்தாழ டசிக் கணக்கானோரைக் காணவில்லை என்பதுடன் 70 பேரளவில் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்திருந்ஹது. அரசாங்கத்தின் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைவு என்றபோதும் தாம் இன்னும் தகவலை இற்றைப்படுத்துவதாகக் கூறியிருந்தது.

இந்நிலையில், மீட்பு நடவடிக்கைகளை தாமதப்படுத்துவதற்கான எந்தத் திட்டமும் இல்லை என ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்திருந்தார்.

ஹகிபிஸ் ஆனது ஜப்பானின் 47 மாவட்டங்களில் 36 பாதித்திருந்த நிலையில், சூறாவளிக்குப் பின்னர் 3,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக பிரதமர் ஷின்ஸோ அபேயின் அலுவலகம் கூறியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X