2025 மே 14, புதன்கிழமை

’’ஹைகுய்’’ காரணமாக சேவைகள் பாதிப்பு

Freelancer   / 2023 செப்டெம்பர் 04 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வானில் 'ஹைகுய்' புயல் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில்  ரயில், விமானம் மற்றும் படகு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த புயல் தைதுங் கவுன்டி பகுதியில் நேற்று காலை கரையை கடந்தது. அதன்போது மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால், அப்பகுதியே புழுதி மண்டலமாக மாறியுள்ளது.

புயல் காரணமாக இடைவிடாது பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வௌ்ளநீர் புகுந்து குடியிருப்புக்கள் மற்றும் விளை நிலங்கள் பாதிப்படைந்துள்ளன.

மேலும் கனமழை மற்றும் காற்று காரணமாக, 460க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு. ரயில் சேவையும் முடங்கியுள்ளது. இதனிடை​யே தைவானின் பிரபலமான காற்று பலுான் திருவிழா,மற்றும் வெளிப்புற இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் ஆகியவை புயல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன.

புயல் எச்சரிக்கை காரணமாக, கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதோடு. கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .