Editorial / 2019 ஜூன் 25 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தஞ்சையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காவிரி, டெல்டா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு, மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதை எதிர்த்து டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில் மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்றும் (25) ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டோர், தஞ்சை ரயில் நிலையத்தில் திருச்சி, மயிலாடுதுறை பயணிகள் ரயில்களை மறிக்க முயன்றபோது, பொலிஸார் அதைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும் விவசாயத்தை அழிக்கக் கூடியத் திட்டத்துக்கு, தமிழக அரசாங்கம் உடந்தையாகச் செயற்படுவதாகக் கூறி, தமிழக அரசாங்கத்துக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள், விவசாயத்தையும் மக்களையும் பாதிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய மாநில அரசாங்கங்கள்ல செயற்படுத்த முயன்றால் போராட்டங்கள் தீவிரமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போதே 100க்கும் மேற்பட்டோரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
10 minute ago
17 minute ago
21 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
21 minute ago
47 minute ago