2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஹோட்டலில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 76ஆக உயர்வு

Freelancer   / 2025 ஜனவரி 22 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியின் வடமேற்கில் உள்ள போலு மாகாணம் கிப்ரிசிக் நகரில் கர்தால்கயா ஸ்கை ஹோட்டலில், திங்கட்கிழமை (20) இரவு ஏற்பட்டதீ விபத்தில் உயிரிந்தோர் எண்ணிக்கை 76ஆக உயர்ந்துள்ளது. 

12 தளங்களைக் கொண்ட அந்த ஹோட்டல் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்தில் சிக்கி 66 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 76ஆக உயர்ந்தது.

அவர்களில் 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். ஓட்டல் முழுவதும் புகை சூழ்ந்திருந்ததால், தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து விருந்திர்னர்களை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் அந்த ஓட்டலில் 234 விருந்தினர்கள் தங்கியிருந்தன்ர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முன்னெச்சரிக்கையாக ரிசார்ட்டில் உள்ள மற்ற ஹோட்டல்களில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X