2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஸ்ரீலங்கா ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் போட்டி 2011

Super User   / 2012 ஜனவரி 11 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கெட்டர்பில்லர் தயாரிப்புகளை இலங்கையில் விநியோகிக்கும் ஏக விநியோகத்தர்களான (UTE) யூ.ரி.ஈ.  நிறுவனத்தின் அனுசரணையில் கொழும்பு கோல்ஃப் மைதானத்தில் இடம்பெற்று வந்த ஸ்ரீலங்கா ஓபன் கோல்ஃப் சம்பியன்சிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நிறைவடைந்துள்ளன. இந்தப் போட்டித ;தொடர் இலங்கை கோல்ஃப் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வுக்கு UTE– CAT ஸ்ரீலங்கா ஓபன் கோல்ஃப் சம்பியன்சிப் என பெயரிடப்பட்டிருந்தது.

இந்த கோல்ஃப் சம்பியன்சிப் போட்டிக்கு சமாந்தரமாக மேலும் ஆண்களுக்கான போட்டி மற்றும் பெண்களுக்கான பேம் பெர்னான்டோ ஞாபகார்த்த போட்டியும் ஜனவரி 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இடம்பெற்றிருந்தன.

UTE– CAT  ஸ்ரீலங்கா திறந்த போட்டியில் வெற்றி பெறும் நபர் 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் சிறந்த கோல்ஃப் வீரராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் யூ.ரி.ஈ. குழுமத்தின் தலைவர் பிரியத் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில், 'எமது நிறுவனம் இந்த கோல்ஃப் விளையாட்டுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. இலங்கையின் முன்னாள் சிறந்த கோல்ஃப் வீரராக தெரிவு செய்யப்பட்டிருந்தவர் யூ.ரி.ஈ. நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மறைந்த பின்பெர்னான்டோ ஆவார். நாம் இலங்கையின் கோல்ஃப் விளையாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக பங்களிப்பை வழங்கி வந்துள்ளோம்;' என்றார்.

பேம் பெர்னான்டோ இலங்கையில் கோல்ஃப் விளையாட்டின் முதல் பெண்மணி எனக்கருதப்படுபவர். இவர் இலங்கையின் முன்னாள் கோல்ஃப் சம்பியனான பின்பெர்னான்டோவின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 5 தடவைகள் சிறந்த கோல்ஃப் வீராங்கனை எனும் விருதை வெற்றி கொண்டதன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் மிகவும் முதிய வயதில் தேசிய கோல்ஃப் விருது பெற்றவர் எனும் நாமத்துடன் இடம்பிடித்துள்ளார். இலங்கை பெண்களிடையேயும், இளையவர்களிடையேயும் கோல்ஃப் விளையாட்டை பிரபல்யமடையச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

இந்த வருடத்தின் கோல்ஃப் போட்டிகள் மேலும் பிரபல்யமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை சீனாகுடா பகுதியின் ஈகிள் கோல்ஃப் லிங்க்ஸ் மற்றும் விக்டோரியா கோல்ஃப் லிங்க் கன்ட்ரி றிசோர்ட் கழகத்திலிருந்தும் தலா 12 மற்றும் 13 அங்கத்தவர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பியன்ஷிப் போட்டிகளில் 2011 இல் இந்திய சுற்று போட்டிகளில் தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்த வீரர்கள் பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யூ.ரி.ஈ. மற்றும் பின், பேம் பெர்னான்டோ குடும்பத்தினர் இணைந்து இந்த கோல்ஃப் சம்பியன்ஷிப் விளையாட்டை வருடாந்தம் ஒரு முறை நடைபெறும் நிகழ்வாக தமது நாட்காட்டியில் இடம்பெறச் செய்ய தீர்மானித்திருந்தனர். இதன் மூலம் தொடர்ச்சியாக இளம் கோல்ஃப் திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளனர். யூ.ரி.ஈ. நிறுவனம் றோயல் கொழும்பு கோல்ஃப் கழகத்தின் பின்பெர்னான்டோ கிண்ண போட்டிக்கும் அனுசரணை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X