2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ். சென் ஜோன்ஸ் அணிக்கு 195 ஓட்டங்கள்

Super User   / 2011 டிசெம்பர் 19 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர வித்தியாலய அணியுடனான 19 வயதுக்குட்பட்டோருக்கான இருநாள் கிரிக்கெட் போட்டியில் சென் ஜோன்ஸ் அணி 195 ஓட்டங்களைப் பெற்றது.

கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர வித்தியால மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் யாழ் சென் ஜோன்ஸ் அணி சார்பாக மகேஷ்வரன் விந்தராகன் 40 ஓட்டங்களையும் பேரின்பராஜா பிரிந்தாபன் 35 ஓட்டங்களையும் அலி அக்பர் சன்சஜன் 32 ஓட்டங்களையும் சஜீந்திரன் கபிலராஜ் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வித்தியால அணி பந்துவீச்சாளர்களில் தரிந்து, ஹேஷான் 67 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும் என். நதீர 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இன்று மாலை துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஸ்ரீ ஜயவர்தனபுர வித்தியால அணி, இன்றைய ஆட்டமுடிவின்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தொடர்புடைய செய்தி:
யாழ். சென் ஜோன்ஸ் - ஸ்ரீ ஜயவர்தனபுர வித்தியாலய வருடாந்த கிரிக்கெட் போட்டி மீண்டும் ஆரம்பம்


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X