2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'ஸஹிரியன் 2009' கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Super User   / 2011 செப்டெம்பர் 07 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா கல்லூரியின் 'ஸஹிரியன் 2009' மாணவர்கள் ஏற்பாடு செய்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஸஹிரியன் சிவப்பு அணியினர் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டனர்.

கல்முனை ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற சுற்றுப்போட்டியில் ஸஹிரியன் மஞ்சள் அணி, பச்சை அணி, சிவப்பு அணி ஆகியன கலந்து கொண்டன. இறுதி போட்டியில் பச்சை அணியும் சிவப்பு அணியும் கலந்துகொண்டன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸஹிரியன் சிவப்பு அணியினர்  8 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 71 ஓட்டங்களைப்பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  ஸஹிரியன் பச்சை அணியினர் 7.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 54 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். இதனையடுத்து ஸஹிரியன் சிவப்பு அணியினர் 17 ஓட்டங்களினால் வெற்றி பெற்று  'ஸஹிரியன் 2009' வெற்றி கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X