2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பிரிவு 3 இற்கான உதைபந்தாட்ட சுற்றுத் தொடரின் லீக் சுற்றில் திஹாரிய யூத் விளையாட்டுக்கழகம் வெற்றி

Kogilavani   / 2011 நவம்பர் 15 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(திஹாரிய அதீம் ஸுபைர்)

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளணத்தினால் நடத்தப்படும் பிரிவு 3 இற்கான உதைபந்தாட்ட சுற்றுத் தொடரின் லீக் சுற்றில் திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம் வெற்றிப்பெற்றுள்ளது.

தர்கா நகர் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், திஹாரிய யூத் விளையாட்டுக் கழகமும் பேறுவளை ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன.

ஆட்டத்தின் முதற்பாதியில் 2:2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. போட்டி முடிவின்போது, 4:3 என்ற புள்ளிகளை பெற்று திஹாரிய யூத் அணி வெற்றி பெற்றது.

திஹாரிய யூத் சார்பாக மொஹமட் யாஸர், மொஹமட் இபாம் தலா இரண்டு கோல்கள் வீதம் போட்டனர்.

லீக் சுற்றின் திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம் கலந்துக்கொள்ளும் இரண்டாவது சுற்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கம்பாஹா நகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் திஹாரிய யூத் விளையாட்டுக் கழகமும் அம்பலங்கொட கெடேரியன்ஸ் அணியும் மோதிக்கொள்ளவுள்ளன.                               


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X