Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 டிசெம்பர் 20 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அதீம் ஸுபைர்)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்படும் பிரீமியர் லீக் பிரிவு 3 க்கான கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதிப் போட்டியில் திஹாரிய யூத் விளையாட்டுக்கழகம் மன்னார் பள்ளிமுனை சென்.லூஸியஸ் விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
மன்னார் பேராயர் ஆர்.ஜோஸப் அரங்கில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இப்போட்டி நடைபெற்றது.
போட்டியின் ஆரம்பத்தில் சென்.லூஸியஸ் அணியானது முதலாவது கோலைப் போட்டு முன்னிலையில் இருந்தது. எனினும் சற்று நேரத்தின் பின் திஹாரிய யூத் அணியின் முன்கள வீரர் மொஹமட் யாஸர் தனது அணிசார்பாக முதலாவது கோலைப் போட்டு முதலாவது பாதியை 1:1 என்ற ரீதியில் சமநிலையில் முடிய உதவி செய்தார்.
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல்களை போடும் பல சந்தர்ப்பங்களை தவறவிட்டனர். இறுதியில் போட்டியானது 1:1 என்ற ரீதியில் சமநிலையில் முடிவடைந்தது.
வெற்றி தோல்வியை பெனல்டி உதை மூலம் தீர்மானிக்க போட்டி நடுவர் முடிவு செய்தார். இரு அணிகளுக்கும் வழங்கப்பட்ட 5 பெனல்டி உதைகளில் திஹாரிய யூத் விளையாட்டு கழகமானது 3 கோல்களையும் சென்.லூஸியஸ் அணியானது 1கோலையும் பெற்றுக்கொண்டன.
இறுதியில் திஹாரிய யூத் 4:2 என்ற கோல் ரீதியில் வெற்றி பெற்று பிரீமியர் லீக் பிரிவு 3க்கான இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது.
இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மற்றைய அணி காலி கெடேரியன்ஸ் ஆகும்.
இவ்விரு அணிகளும் மோதும் இறுதிப் போட்டியானது எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ளது. அதேவேளை இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட இரு அணிகளும் எதிர்வரும் வருடம் பிரீமியர் லீக் உதைபந்தாட்ட தொடரில் பிரிவு 2ல் விளையாடவுள்ளனர்.
22 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
54 minute ago
2 hours ago