2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பிரிமியர் லீக் 3 ஆம் பிரிவு கால்பந்தாட்டத் தொடரில் காலி கெடேரியன்ஸ் சம்பியன்

Super User   / 2012 ஜனவரி 10 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அதீம் ஸுபைர்)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்பட்ட பிரிமியர் லீக் 3 ஆம் பிரிவு கால்பந்தாட்டத் தொடரில் காலி கெடேரியன்ஸ் அணி சம்பியனாகியுள்ளது.

இத்தொடரின் இறுதிப்போட்டி கடந்த வார இறுதியில் கம்பஹா ஸ்ரீபோதி விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இப்போட்டியில் காலி கெடேரியன்ஸ் அணியும் திஹாரி யூத் விளையாட்டுக் கழகமும் மோதின.

ஆட்டம் ஆரம்பித்து சற்று நேரத்திற்குள்ளே காலி கெடெரியன்ஸ் அணி முதலாவது கோலைப்போட்டு போட்டியில் முன்னிலை பெற்றது. எனினும் போட்டியின் இறுதி வரை திஹாரி யூத் அணியினரால் எந்தவித கோலையும் பெற முடியவில்லை.

எனவே 2011ஆம் ஆண்டிற்கான பிரிவு 3 இற்கான சம்பியனாக காலி கெடேரியன்ஸ் அணி தெரிவு செய்யப்பட்டது.

கிண்ணத்தை சுவீகரித்த காலி கெடேரியன்ஸ் அணிக்கு கிண்ணமும் 100இ 000 ரூபா பணப்பரிசும் 2ம் இடத்தை பெற்ற திஹாரிய யூத் அணியினருக்கு 50இ000 ரூபா பணப்பரிசும் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பெற்றோலிய வள பிரதியமைச்சர் சரண குணவர்தனவால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் லசந்த அழகியவண்ண மேல் மாகாண சபை உறுப்பினர் சுனில் விஜேரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X