2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பிறாவு விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் 30 அணிகள் பங்குக்கொண்ட கிரிக்கெட் சுற்று போட்டி

Kogilavani   / 2011 ஜூலை 25 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம், இஸ்மாயில் புரம் பிறாவு விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி நேற்று முன்தினம் சனிக்கிழமையும், நேற்று ஞாயிற்று கிழமையும் நடைப்பெற்றது.

 

30 அணிகள் பங்கு பற்றிய இச்சுற்று போட்டியில் இறுதி போட்டிக்கு தம்பபண்ணி, அல் ஜெசிரா விளையாட்டு கழகமும் புத்தளம் சமகி விளையாட்டு கழகமும் தெரிவு செய்யப்பட்டன.

நேற்றைய தினம் மாலை போதிய வெளிச்சமின்மை காரணத்தினால் போட்டி இடை நிறுத்தப்பட்டு இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய இரண்டு அணிகளுக்கும் பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இப்போட்டி நிகழ்வில் வணாத்தவில்லு பிரதேசசபை தலைவர் இந்திக சேனாதீர, பிரதேச சபை உறுப்பினர் எம். ருவைஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X