2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

15 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக் கிடையிலான கால்பந்தாட்ட போட்டிகள்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 25 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் மிக நம்பகமானதும், அனைவராலும் விரும்பப்படும் தானிய ஆகாரமான சமபோஷ வர்த்தகநாமமானது, அண்மையில் தொடர்ந்து 6ஆவது ஆண்டாக பாடசாலைகளுக்கிடையேயான உதைப்பந்தாட்ட போட்டித்தொடரிற்கு அனுசரணை வழங்கியிருந்தது. மிகச்சிறந்த 32 ஆண்கள் அணிகள் மற்றும் 24 பெண்கள் அணியினர் பங்குபற்றிய போட்டிகளின் இறுதி நிகழ்வு டிசெம்பர் 2 முதல் 5 ஆம் திகதி வரை களுத்துறையில் இடம்பெற்றது. இந்த போட்டியை இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சங்கம் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது.

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரன்ஜித் ரொட்ரிகோ இந்த போட்டியின் வெற்றி குறித்து தெரிவித்ததாவது, 'இலங்கையில் உதைப்பந்தாட்ட நட்சத்திரங்களை அடையாளம் காணும் வகையில் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் இப் போட்டி வருடாந்தம் நடைபெறுகிறது. ஆர்வமுள்ள இளம் உதைப்பந்தாட்ட வீரர்கள் உந்துசக்தியுடன் போட்டியிடுவதற்கு சிறந்த களமாக இப்போட்டி விளங்குகிறது. இலங்கையில் இளம் உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு பெறுமதி வாய்ந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த CBL மற்றும் சமபோஷவின் அனுசரணைக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்' என்றார். 

இந்த வருட போட்டிகளில்;; 313 ஆண்கள் அணிகள் மற்றும் 100 பெண்கள் அணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி நாடு முழுவதுமிருந்து 8500 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்குபற்றியிருந்தனர். ஆரம்பச்சுற்று போட்டிகள் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட 25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நாடுமுழுவதும் உள்ள 30 நிலையங்களில் நடைபெற்றன. இப் போட்;டிகளில் தொடர்ந்து 4ஆவது ஆண்டாக பெண்கள் பிரிவில் குருநாகல் மலியதேவ பெண்கள் வித்தியாலயமும், ஆண்கள் பிரிவில் காலி சி.டபிள்யு.டபிள்யு கன்னங்கர மகா வித்தியாலயமும் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தது.

இப் போட்டிகளில்; போட்டித்தொடரின் சிறந்த ஆண் மற்றும் பெண் வீரருக்கான விருதுகள் மற்றும் சிறந்த கோல் காப்பாளர் விருது போன்றன வழங்கப்பட்டன. காலி கன்னங்கர வித்தியாலயத்தைச் சேர்ந்த விஷான் உதயகுமாரவிற்கு ஆண்கள் பிரிவில் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதும், களுத்துறை வெலபுர மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கவிந்தியா தருடினி பெண்கள் பிரிவில் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதும் வழங்கப்பட்டன. இப் போட்டிகளில் மிக பெறுமதியான ஆண் வீரருக்கான விருது கன்னங்கர கல்லூரியை சேர்ந்த உதார சங்கல்பனவிற்கும், குருநாகல் மலியதேவ பெண்கள் வித்தியாலயத்தை சேர்ந்த கயாத்ரி நாணயக்காரவிற்கு மிகப் பெறுமதி வாய்ந்த பெண் வீராங்கனைக்கான விருதும் வழங்கப்பட்டிருந்தன.

இப் போட்டியின் வெற்றி குறித்து பிளென்டி ஃபூட்ஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளரும்/ பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், 'தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 15 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையேயான போட்டிக்கு அனுசரணை வழங்கியதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எதிர்கால சந்ததியினர் மத்தியில் போசாக்கு ஊடாக ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதே எமது குறிக்கோளாக உள்ளதுடன், அதற்கு உதவுவதாக இப் போட்டிகள் அமைந்துள்ளன. எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் பல உதைப்பந்தாட்ட போட்டிகளுக்கு பங்களிப்பு வழங்க எதிர்பார்த்துள்ளோம்' என்றார்.

வர்த்தகநாமம் மற்றும் உதைப்பந்தாட்டத்துடனான தொடர்பு குறித்து சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் தேஜா பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், 'உலகில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 250 மில்லியன் வீரர்கள் உதைப்பந்தாட்டம் விளையாடுவதுடன், உலகில் மிகப் பிரபலமான விளையாட்டாக இது விளங்குகிறது. இதற்கு வேகம், சுறுசுறுப்பு மற்றும் உடற்பலன் ஆகிய மூன்றும் அவசியமாகும். பயிற்சிகளுக்கோ அல்லது விளையாட்டின் போதோ திடமுடன் இருப்பதற்கு உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு நாளாந்தம் சீரான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. தினசரி சமபோஷ உட்கொள்வதன் மூலம் உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது' என்றார்.

சமபோஷ வர்த்தகநாமமானது வளரும் குழந்தைகளுக்கு விசேடமாக விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளுக்கு போசாக்கினை வழங்குகிறது. சோளம், அரிசி, சோயா மற்றும் பச்சைப் பயறு தானியங்கள் உள்ளடக்கியிருக்கும் சமபோஷ குழந்தைகளை ஆரோக்கியமான வாழ்;க்கை முறை நோக்கி வழிநடத்துகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .