2025 ஜூலை 17, வியாழக்கிழமை

16 வயதுக்குட்பட்ட மைலோ கிண்ண றகர் போட்டியில் புனித பீற்றர்ஸ் கல்லூரி சம்பியன்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)
அகில இலங்கை பாடசாலைகள் றகர் சங்கம் ஒழுங்கு செய்த 16 வயதிற்கு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கான மைலோ கிண்ண றகர் போட்டியில் கொழும்பு புனித பீற்றஸ் கல்லூரி வெற்றி பெற்றது.

கண்டி போகம்பறை மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் கண்டி திருத்துவக் கல்லூரியும் கொழும்பு புனித பீற்றர்ஸ் கல்லூரியும் போட்டியிட்டன.

இதில் 5-0 என்ற புள்ளி வித்தியாசத்தில் புனித பீட்டர்ஸ் கல்லூரி வெற்றி பெற்றது.

கேடயத்திற்கான (சீல்ட்  சம்பியன்) இறுதிப் போட்டியில் அத்துலத்முதலி வித்தியாலயம் 10-0 என்ற புள்ளி வித்தியாசத்தில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியையும், பதக்கத்திற்கான (போல்ட் சம்பியன்) போட்டியில் கேரி கல்லூரி 3-0 என்ற புள்ளி வித்தியாசத்தில் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியையும் வெற்றி கொண்டன.

தட்டத்திற்கான போட்டியில் (பிலேட் சம்பியன்) புனித ஜோசெப் கல்லூரி 15-0 என்ற புள்ளி வித்தியாசத்தில் கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்கா வித்தியாலயத்தை வெற்றி கொண்டது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X