2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனையில் அம்பாறை மாவட்ட விளையாட்டு விழா

Super User   / 2011 ஜூன் 18 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்ட விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை அட்டாளைச்சேனை அஷ்ரஃப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட விளையாட்டு விழா வரலாற்றில் இம்மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் வாழும் கரையோரப் பகுதியொன்றில் இடம்பெற்றமை இதுவே முதன்முறையாகும்.

விளையாட்டு அமைச்சும், கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சும் இணைந்து மேற்படி விளையாட்டு விழாவினை நடத்தின.

அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அமீர் அலியின் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களைச் சேர்ந்த முஸ்லிம், சிங்கள மற்றும் தமிழ் விளையாட்டு வீரர்கள் இன்றைய போட்டிகளில் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் கே.கே.ஜி.ஐ.டி.பி. விஜேதிலக, இறக்காமம் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜுதீன், அட்டாளைச்சேனை இளைஞர் சேவை அதிகாரி யூ.எல். மஜீத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X