2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கால்பந்தாட்ட போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரிக்கு சம்பியன்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 19 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தினால் நடத்தப்பட்ட புத்தளம் வலய பாடசாலைகளுக்கிடையில் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டி இன்று புத்தளத்தில் நடைபெற்றது.

09 பாடசாலைகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியும் வெட்டாளை அஸன்குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயமும் இறுதி போட்டிக்கு தெரிவாகின.

இவ்விரு பாடசாலை அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் இறுதி வரை எந்தவொரு அணியும் கோல்களை போடாததினால் போட்டி நடுவரினால் பெனால்ட்டி வழங்கப்பட்டது. பெனால்ட்டியில் 03:02 என்ற கோல்களின் அடிப்படையில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி வெற்றிபெற்று சம்பியனாகியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X