2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்ட விளையாட்டு விழா முடிவுகள்

Super User   / 2011 ஜூன் 19 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்ட விளையாட்டு விழாவின் மெய்வல்லுநர் ஆண்களுக்கான போட்டிகளில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும், பெண்கள் போட்டிகளில் பதியத்தலாவ பிரதேச செயலகமும் அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டதாக அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜுதீன் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

அம்பாறை மாட்ட விளையாட்டுப் போட்டிகள் நேற்று அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகாரத்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.

இந்த விழாவின் போட்டி நிகழ்ச்சிகளில் அம்பாறை மாவட்ட பிரதேச செயலங்களைச் சேர்ந்த சுமார் 300 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டதாக விளையாட்டு உத்தியோகத்தர் தாhஜுதீன் மேலும் கூறினார்.

அம்பாறை மாவட்ட விளையாட்டு விழாவொன்று முதன் முறையாக மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X