2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மர்ஹும் ஏ.மீராசாஹிப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தை கல்முனை ஜிம்கானா விளையாட்டுக் கழகம் கைப்பற்றியது

Super User   / 2011 ஜூன் 25 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது சன் பிளவர் விளையாட்டுக் கழகத்தின் 15ஆவது ஆண்டு நிறைவையொட்டி சாய்ந்தமருது அஷ்ரப் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற  மர்ஹும் ஏ.மீராசாஹிப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தினை கல்முனை ஜிம்கானா விளையாட்டுக் கழகம் சுவீகரித்தது.

கொழும்பு மெட்ரோபொலிடன் கல்லூரியின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுள்ள விளையாட்டுக் கழகங்கள் பங்கு கொண்ட 20 – 20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகம் 18.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்நிகழ்வில் ள் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாகவும் மெட்ரோபொலிடன் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எம்.எம்.சிராஸ் உட்பட பலர் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X