Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 25 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட், எஸ்.எம்.எம்.ரம்ஸான்)
அம்பாறை மாவட்ட கால்ப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய கடற்கரை கால்;பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் (ஒரேஞ்) விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
மருதமுனை கோல் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கால்ப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய கடற்கரை கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மருதமுனை கடற்கரையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் கழகத்தை எதிர்த்து அதே பிரதேசத்தைச் சேர்ந்த கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகம் மோதியதில் - ஒலிம்பிக் கழகம் சம்பியன் கிண்ணத்தைத் தட்டிக் கொண்டது.
இந்தச் சுற்றுப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெறும் அணிக்கான போட்டியும் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதில் ஒலிம்பிக் (பச்சை) அணி கோல்ட் மைன்ட் (வெள்ளை) அணியை வீழ்த்தி மூன்றாம் இடத்தைத் தனதாக்கிக் கொண்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பணப் பரிசும் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
17 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
49 minute ago
2 hours ago